பாரில் துப்பாக்கிச்சூடு... 4 பேர் பலி, பலர் காயம்... அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்!

 
அமெரிக்கா

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள செயின்ட் ஹெலினா தீவில் அமைந்துள்ள உணவகத்துடன் கூடிய ஒரு பாரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அங்கு மதுபானங்களுடன் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், பலர் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தபோது திடீரென சிலர் துப்பாக்கியால் சூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கா போலீஸ்

துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டதும், பாரில் இருந்த நூற்றுக்கணக்கானோர் அலறியடித்து தப்பியோடினர். பலர் அருகிலுள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களுக்கு உள்ளே புகுந்து தஞ்சம் அடைந்தனர். ஆரம்ப தகவலின்படி, இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி

சம்பவம் நடந்ததும் அவசர மருத்துவ சேவையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். 4 பேரின் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?