அத்துமீறி வீட்டிற்கு நுழைந்த எஸ்.ஐ.. போராட்டத்திற்கு பின் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட எஸ்.பி!

தென்காசி மாவட்டம் வி.கே. புதூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாகப் பணிபுரியும் சதீஷ்குமார். கடந்த 18 ஆம் தேதி மதியம் வீராணம் மெயின் ரோட்டில் பூட்டிய வீட்டின் கழிப்பறையில் ஒளிந்து கொண்டிருந்தார். வீட்டின் உரிமையாளர் கதவைத் திறந்ததும், மீண்டு வந்த சதீஷ்குமார், தான் வந்த பைக்கை அங்கேயே விட்டுவிட்டு, மற்றொரு போலீஸ்காரரான கார்த்திக்கின் பைக்கில் ஏறி தப்பிச் சென்றார்.
இதையறிந்த வீராணம் கிராம மக்கள், எஸ்.ஐ. சதீஷ்குமாரை சஸ்பெண்ட் செய்யக் கோரி, அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால், ஆலங்குளம் டிஎஸ்பி ஜெயபால் பர்ணபாஸ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மறியல், நியாயமான விசாரணை நடத்தப்பட்டு எஸ்.ஐ. சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால், எஸ்.ஐ. சதீஷ்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, அவர் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. அரவிந்த் நேற்று உத்தரவிட்டார். எஸ்.ஐ.க்கு உதவியாக இருந்த போலீஸ்காரர் கார்த்திக்கை செங்கோட்டை காவல் நிலையத்திற்கு மாற்றவும் எஸ்.பி. உத்தரவிட்டார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!