'தக் லைஃப்' சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்... வைரல் வீடியோ!

 
சிம்பு 49

 தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். இவர் தமிழ் ரசிகர்களால் சிம்பு என செல்லமாக அழைக்கப்படுகிறார். பிப்ரவரி 3ம் தேதியான இன்று  சிலம்பரசன் தனது  பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில்  நடிகர் சிம்புக்கு திரைத்துறையினர், ரிசகர்கள் மற்றும் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனையொட்டி சிம்பு நடிக்கும் 49-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அந்த வரிசையில், தக் லைஃப் படக்குழு சார்பில் நடிகர் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து  தக் லைஃப் படத்தை தயாரித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிம்பு 49

இந்த வீடியோவில் நடிகர் சிம்பு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கிறார்.  வீடியோ முடிவில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் எஸ்.டி.ஆர். எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.  சிம்பு பிறந்த நாளை ஒட்டி அவரது படம் குறித்த வீடியோ வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

From around the web