டேய் 2கே கிட்ஸ்... சிம்பு அடுத்தப்படம் குறித்து புது அப்டேட்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிம்பு. இவர் தனது அடுத்தப்படம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து, காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தன்னை உயர்த்தி கொண்டவர் சிம்பு. அதன்பிறகு பல வெற்றிப்படங்களை கொடுத்த நிலையில் மன்மதன் படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானார். அதே போல் இயக்குநர், பாடகர், ஆசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்.
படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது குறித்து இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
Dei 2k kids , 90’s mood la nalaiku sharp ah 6.06 pm ku varen 🧨
— Silambarasan TR (@SilambarasanTR_) October 20, 2024
கடைசியாக ’பத்து தல’ என்ற படததில் நடித்திருந்த சிம்பு, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து தக் லைஃப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ’தக் லைஃப்’ படத்திற்கு பிறகு சிம்பு, அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு தற்காலிகமாக எஸ்.டி.ஆர் 48 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சிம்பு தற்போது தனது அடுத்தபடம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘டேய் 2கே கிட்ஸ், 90எஸ் மோட்ல நாளைக்கு ஷார்ப்பா 6.06 பி.எம்.க்கு வரேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக அக்டோபர் 19ம் தேதி தம் + மன்மதன் + வல்லவன் + விடிவி+ இன் ஜென் இசட் மோட்= நண்பா நெக்ஸ்ட் என பதிவிட்டிருந்தார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!