ரொம்ப ஈஸி... ரிசல்ட் உடனே தெரியும்... கருப்பு அக்குளையும் அழகு படுத்த 6 எளிமையான வழிமுறை!
இன்றைய இளம் பெண்களின் பெரும் சவாலான விஷயங்களில் ஒன்றாக ஸ்லீவ் லெஸ் அணியும் போது அடர் கருமையான அக்குளை மறைப்பதாக கருதுகின்றனர். இதனை மிக எளிய வழிமுறைகள் மூலம் அழகாக்கி காட்ட முடியும். அதற்காக மணிக்கணக்கில் பார்லருக்கோ, ஆயிரக்கணக்கில் பணமோ செலவிட தேவையில்லை. விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, எப்போதும் அக்குள்களை வெண்மையாக்க இயற்கையான சில விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடித்து வந்தாலே போதுமானது.
அக்குள்களில் அந்த இடத்தில் சருமத்தில் இறந்த செல்கள் உருவாகி, சருமம் கருமையாக காட்சியளிக்கிறது. இறந்த சரும செல்களை அகற்றவும், முடி வளர்ச்சியைத் தடுக்கவும், அக்குள்களை அடிக்கடி எக்ஸ்ஃபோலியேட் செய்யவும். இதற்கு, ஒரு லேசான ஸ்க்ரப் அல்லது சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலவையை உருவாக்கி, அதை அக்குள்களில் தடவி, ஸ்லர்ப் செய்யலாம். இதனை வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
அதே போல் அக்குள் பகுதியில் முடியை அகற்றுவதற்கான ஒரு செயல்முறையில் பிளேடு தோலைத் தொட்டு அந்தப் பகுதியை காயப்படுத்தினால் அந்த பகுதி முழுவதுமே கருப்பாகி விடும். குறிப்பாக முடி வளரும் திசையில் ஷேவ் செய்யவும். .
முடி வளரும் திசைக்கு எதிராக ஷேவ் செய்தால், அது சருமத்தை சேதப்படுத்தி விடும். கூர்மையான ரேசர் மற்றும் ஷேவிங் கிரீம் அல்லது ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்தி மிகவும் கவனமாக ஷேவ் செய்யவும். ஒரே இடத்தில் பலமுறை ஷேவிங் செய்வதைத் தவிர்க்கவும்.
சிலர் வியர்வை நாற்றத்தைத் தடுக்கவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் தங்கள் அக்குள்களில் டியோடரண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இந்த டியோடரண்டுகளில் உள்ள ரசாயனங்கள் அக்குள் தோலை சேதப்படுத்தி கருமையாக்கும். அதற்கு பதில் ஆப்பிள் சைடர் வினிகரை தடவலாம்.
அதே போல் எலுமிச்சை சாற்றை வாரத்திற்கு 2-3 முறை 10-15 நிமிடங்கள் அக்குள்களில் தடவவும். எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை சருமத்தை ஒளிரச் செய்து கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 டேபிள் ஸ்பூன் தயிரையும் கலந்து அக்குள் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம்.
இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. இதனால் சருமம் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு, அங்குள்ள சருமம் இறந்து விடும். இது அந்த பகுதியை கருப்பு நிறமாக்கும். தோல் சுவாசிக்கக்கூடிய தளர்வான ஆடைகளை அணிய வேண்டியது அவசியம்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!