ஒரே நேரத்தில் 3 மொழிகளில் ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

 
ஒரே நேரத்தில் 3 மொழிகளில்  ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு .இவர் சமீப காலமாக காமெடி அவதாரத்தில் இருந்து கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார். இதனால் இவருக்கான மார்க்கெட் உயர்ந்து வருகிறது.

ஒரே நேரத்தில் 3 மொழிகளில்  ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

முண்ணனி கதாநாயகன்களுடன் போட்டி போடும் அளவு குறுகிய காலத்திலேயே வளர்ந்துள்ளார். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி படங்களாகி வருகின்றன. அவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படம் இந்திய அளவில் விமர்சனங்களை பெற்று வெற்றி படமாகியது. இதனையடுத்து யோகிபாபுவின் மார்க்கெட் சற்றே விரிவடைந்துள்ளது என்று கூறலாம்.

தற்போது இயக்குநர் அனுசரன் இயக்கும் ‘பன்னிக்குட்டி’ திரைப்படத்தில் யோகிபாபு மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார் . லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திண்டுக்கல் லியோனி, கருணாகரன், விஜய் டிவி புகழ், ராமர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் 3 மொழிகளில்  ரிலீஸ்!! தட்டி தூக்கிய யோகிபாபு!!

இந்த படத்தின் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை 11:11 என்கிற தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மொத்தத்தில் தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு நீங்கலாக மற்ற மொழிகளில் யோகிபாபுவின் ‘பன்னிக்குட்டி’ வெளியாகவுள்ளது.

From around the web