இளையராஜா தலைமையில் பாடகர் தெருக்குரல் அறிவு திருமணம்... குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவில் ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் தெருக்குரல் அறிவு. இவர் பாடலாசிரியரும் கூட. இவர் பா. ரஞ்சித் கூட்டத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த காலா படத்தில் உரிமையை மீட்போம் என்ற பாடலை எழுதி இருந்தார்.
இதன் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி ரெயிடு என்ற பாடலை எழுதியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தனுஷ், ஜீவா உட்பட முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடகராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்தவர். அதே நேரத்தில் நிறைய ஆல்பம் பாடல்களை எழுதி இருக்கிறார். அந்த வகையில் இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ உடன் சேர்ந்து என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ம் ஆண்டு யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. இதுபோக அறிவு வெளிநாடுகளிலும் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். தற்போதும் இவர் படங்களில் பிஸியாக பயணித்து தான் வருகிறார். இவர் கல்பனா அம்பேத்கரை காதலிப்பதாக 2022 ல் அறிவித்து இருந்தார். கல்பனா அம்பேத்கர் வருடா வருடம் மார்கழியில் நடந்து வரும் ‘மார்கழியில் மக்கள் இசை’ என்ற கலைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் இன்று தெருக்குரல் அறிவு – கல்பனா அம்பேத்கர் இருவருக்கு, சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இளையராஜா ஸ்டியோவில் இளையராஜா தலைமையில் திருமணம் நடந்து இருக்கிறது.அதன் பிறகு இருவரும் விசிக தலைவர் மற்றும் எம்பி திருமாவளனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இவர்களுடைய திருமண புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!