பிப்.5ல் டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல்!
டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாக இன்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். டெல்லி சட்டசபைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம் வரும் ஜனவரி 10ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18ம் தேதி நடைபெறுகிறது. பரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்ட வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 20ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!