அண்ணியை பலாத்காரம் செய்து கொலை.. கொடூர கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

 
கருங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூத்த சகோதரர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவர் வெளிநாட்டில் இருந்ததால், அவரது 28 வயது மனைவி, தாய் வீட்டிலும், கணவர் வீட்டிலும் மாறி மாறி வசித்து வந்தார். இந்நிலையில் பெண்ணின் மாமியார். கொழுந்தனும் கருங்கல் அருகே சொந்த வீட்டில் வசித்து வந்தார்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்குட்பட்ட தாளக்குடி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், 28 வயது பெண், பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், கணவரின் சகோதரரால் பெண் கொல்லப்பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக அவரை கைது செய்த ஆரல்வாய்மொழி போலீசார், கொலை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கொழுந்தனுக்கு, அண்ணியின் நகைகளை அபகரிக்கும் எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தது தெரியவந்தது. இதற்கான சரியான தருணத்திற்காக காத்திருந்தார். இந்நிலையில், அண்ணிக்கு கடன் பிரச்னை ஏற்பட்டு, தனியார் வங்கியில் நகைகளை அடகு வைத்துள்ளார். வெளிநாட்டில் இருந்து கணவர் பணம் அனுப்பும் போது, ​​நகையை திருப்ப நினைத்தார்.

அதன்படி, வெளிநாட்டில் இருந்து கணவர் பணம் அனுப்ப, நகையை திருப்ப  மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார் அண்ணி. பின் வங்கியில் அடமானமாக வைத்திருந்த நகையை திரும்ப பெற்றுக் கொண்டார். அண்ணி நகைகளைத் திருப்பியதை அறிந்த கொழுந்தன், தான் ஓட்டி வந்த வாடகைக் காரில் அண்ணியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். கொழுந்தன் தன் அண்ணியின் நகைகளைத் திருட இதுவே சரியான தருணம் என்று முடிவு செய்து காரை வேறு வழியில் திருப்பினான்.

மேலும், இது குறித்து அண்ணி கேட்டபோது, ​​மறைவான இடத்தில் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்த கம்பியால் அண்ணியின் தலையில் அடித்துள்ளார். இதனால் அண்ணி மயங்கி விழுந்தார். அப்போது கோபமடைந்த அவர், அண்ணி என்றும் பார்க்காமல் காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். பின்  அவரை கொன்றுவிட்டு பிணத்தை காரின் பின் இருக்கையில் வைத்துவிட்டு உடலை ஆரல்வாய்மொழி அருகே உள்ள சுடுகாட்டில் வைத்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியது தெரிந்தது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்த வழக்கு நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், குற்றவாளி கொழுந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுந்தரையா தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web