காதல் திருமணம் செய்த அக்கா மகள்.. ஆத்திரத்தில் தாய் மாமன் செய்த பகீர் செயல்!

 
உணவு, விஷம்

காதல் திருமணம் செய்து கொண்டவர்களை கிராமங்களை விட்டு ஒதுக்கி வைத்து மணமக்களை பழிவாங்கும் போக்கு நீண்ட காலமாக நடந்து வருகிறது.  ஆணவக்கொலை உள்ளிட்ட பல குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக தற்போது, மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது.

திருமணம்

பன்ஹாலா தாலுகாவிற்கு உட்பட்ட உத்ரே கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மகேஷ் பாட்டீல் உத்ரே கிராமத்தில் வசிக்கிறார். அவரது சகோதரியின் மகள் மகேஷின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்டார். இறுதியாக, குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதித்து திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால்  தாய் மாமா மகேஷ் இதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த மகேஷ், திருமண வரவேற்புக்காக தயாரிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து, பழிவாங்கும் நோக்கில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மண்டபத்தில் அவர் விஷம் கலப்பதைக் கண்ட சிலர் இது குறித்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக,  குடும்பத்தினர், விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடக்கூடாது என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web