அடுத்தடுத்து 6 பீர்... போதையில் உல்லாசம்.. சொகுசு விடுதியில் இளம்பெண் மரணம்!
சென்னை வேளச்சேரி தரமணி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் 60 வயது நபருடன் 27 வயது இளம்பெண் ஒருவர் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில் இருவரும் பீர் குடித்து விட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். இளம்பெண் அடுத்தடுத்து 4 பீர் பாட்டில்களைக் குடித்து முடித்து விட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காலையில் எழுந்து மீண்டும் 2 பாட்டில் பீர் முழுவதையும் குடித்த நிலையில் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு விடுதியில் இளம்பெண் மரணமடைந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வேளச்சேரி போலீசார், விடுதி அறையில் இளம்பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, அறையில் இருந்த 60 வயது முதியவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில், அவர் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜோதி (60) என்பதும், வில்லிவாக்கத்தை சேர்ந்த சசிகலா (50) என்பவருடன் அந்தரங்கமாக பழகி வந்துள்ளதும் தெரிய வந்தது. ஒரு கட்டத்தில் சசிகலா இறந்த நிலையில், கணவனைப் பிரிந்து தாய் வீட்டிற்கு வந்திருந்த சசிகலாவின் 2வது மகள் ரம்யாவுடன் (27) முதியவர் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இருவரும் வேளச்சேரி தரமணியில் சொகுசு விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர். ரம்யாவிற்கு குடிக்கும் பழக்கம் இருந்ததால் 6 பீர் பாட்டில்களை வாங்கி, அதில் 4 பீர்களை ரம்யா குடித்துள்ளார். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை மீதமிருந்த 2 பீர் பாட்டில்களையும் ரம்யா குடித்து முடித்துள்ளார். மீண்டும் இருவரும் உல்லாசமாக இருந்த நிலையில் சிறிது நேரத்தில் நெஞ்சு வலிப்பதாக கூறி ரம்யா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, ரம்யாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறி, போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து முதியவர் ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா அதிகளவில் குடித்ததால் உயிரிழந்தாரா? அல்லது கொலைச் செய்யப்பட்டுள்ளாரா? என ரம்யா இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!