செம மாஸ் வீடியோ... விராட் கோஹ்லி அடிச்சு தூக்கிய சிக்சர்... பாதுகாவலரின் தலையை பதம் பார்த்த பந்து!
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு விளையாடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
THE SHOT OF THE KING. 🥶
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 24, 2024
- Virat Kohli smashed Starc for a six. 🤯 pic.twitter.com/nyNAbgRAAs
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி 2வது இன்னிங்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது வரை இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 467 ரன்கள் குவித்து 513 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 161 ரன்களிலும், கேஎல் ராகுல் 77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோஹ்லி 93 ரன்களுடனும், நிதிஷ் ரெட்டி 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் ஸ்டார்க் வீசிய பந்தில் விராட் கோலி அடித்த சிக்சர் பறந்து சென்று பவுண்டரி லைனில் உட்கார்ந்திருந்த பாதுகாவலரின் தலையில் பட்டது. இதனால் மைதானாத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்திரேலிய அணியின் மருத்துவர்கள் சென்று அவரை பரிசோதித்தனர். சிறிது நேரத்தில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார்
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!