மாயமான நபர் வீடு அருகே எலும்புக்கூடாக மீட்பு... தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள கீழக்கரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாலை என்ற கட்டமுத்து(70). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி உலகம்மாள். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று தூத்துக்குடியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் முத்துமாலை மல்லிகா என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டு ஆறுமுகநேரி பெருமாள்புரம் கடலோர காவல் நிலையம் அருகில் வசித்து வந்தார். இவர் காடுகளில் மரம் வெட்டும் தொழிலாளியாக இருந்துள்ளார். இவர், கடந்த 45 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை.
இவர் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று காடுகளில் மரம் வெட்டும் வேலை செய்து கொண்டு பல நாட்கள் வீட்டுக்கு வராமல் இருப்பது வழக்கமாம். இதனால் குடும்பத்தினர் அவரை ேதடவில்லையாம். இந்நிலையில் நேற்று காலையில் முத்துமாலை வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள வாய்க்காலை ஒட்டியுள்ள முட்புதருக்குள் உடல் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதாக அப்பகுதிக்கு சென்ற சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக்அப்துல் காதர், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு உடல் முற்றிலுமாக அழுகிய எலும்புக்கூடு கிடந்து உள்ளது. அதைக் கைப்பற்றிய போலீசார், அப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரித்தனர்.
அப்போது, முத்துமாலை மனைவி, மகன் ஆகியோர் பிணமாக கிடந்தவர் முத்துமாலை தான் என அடையாளம் காட்டினர். உடல் சிதைந்து கிடந்த முத்துமாலையின் எலும்புக்கூடுகளை கைப்பற்றிய போலீசார் தூத்துக்குடியில் இருந்து தடவியல் நிபுணர் கலா லட்சுமி, கைரேகை நிபுணர் பழனி செல்வி ஆகியோரை வரவழைத்து பரிசோதனை செய்தனர். மேலும் மோப்பநாயும் கொண்டு வரப்பட்டது.
அது 10 அடி தூரம் வரை சுற்றி வந்தது. அவரது எலும்புக்கூடுகளில் ரேகைகள், அடையாளங்களை வைத்து நிபுணர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். வீடு அருகிலேயே அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மர்மச்சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!