ஸ்லிம் சீக்ரெட்... இந்த 20 நிமிஷ ஃபார்மூலாவை மறக்காதீங்க!
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆசைப்படாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் பார்ப்பதை எல்லாம் சாப்பிட்டு உடல் எடை கூடி அதை குறைக்க ஜிம்முக்கு ஓடுபவர்கள் அதிகம். இதற்காக மணிக்கணிக்கில் உடற்பயிற்சியோ பணமோ செலவோ செய்ய தேவையில்லை. ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் ஜாலியாக ஊர் சுத்தினாலே உடல் எடை குறைந்து விடும். என்ன தான் ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவை சாப்பிட்டாலும் தினசரி வழக்கமான உடற்பயிற்சியும் அவசியம்.அதில் குறிப்பாக சைக்கிள் ஓட்டுதல் முக்கிய பயிற்சிகளில் ஒன்று.
2 தலைமுறைக்கு முன் வரை எங்கே சென்றாலும் கால்களில் செருப்பு கூட அணியாமல் பல கிலோமீட்டர் நடந்தே சென்றனர். அடுத்த தலைமுறையில் கொஞ்சம் சைக்களில் செல்ல தொடங்கினர். இவைகளால் தான் அவர்கள் பல காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இப்போதும் செல்லும் இடமெல்லாம் சைக்கிள் ஓட்ட தேவையில்லை.
தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது சைக்கிள் ஓட்டுவது மிகவும் நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். சைக்கிள் ஓட்டும் போது, முழு உடலும் இயங்குகிறது, தசைகள் வலுவடைகின்றன, உடலின் அனைத்து பாகங்களும் வலுவடைகின்றன. தினமும் சைக்கிள் ஓட்டினால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். சுவாச பிரச்சனைகள் குறையும்.
முழங்கால் , மூட்டு வலியில் வயதானவர்கள் பலர் நடக்க முடியாமல் தவிக்கின்றனர். தினமும் சைக்கிள் ஓட்டினால், இந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று சைக்கிள் ஓட்ட முயற்சிக்கவும். சைக்கிள் ஓட்டுவதை வெளியில் செய்யாமல் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி கூடத்திலோ கூட செய்யலாம்.
சைக்கிள் ஓட்டுதல் நல்ல கார்டியோ உடற்பயிற்சி, இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், தினமும் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறையத் தொடங்குவதை கண்கூடாக காணலாம்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!