சூப்பர்... சென்னை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் பார்க்கிங்!
சென்னை மாநகர் முழுவதும் பல பகுதிகளில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய வாகன நிறுத்த கொள்கையை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு தயார் செய்துள்ளது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் சென்னையில் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டு வருகிறது.
இதன்படி ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்திற்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகன நிறுத்த இடங்களில் எத்தனை வாகனங்கள் உள்ளன. அங்கு ஏதாவது விதிமீறல் நிகழ்கிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்படுகின்றன. இதற்காகவே தனியாக ஒரு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
வாகன நிறுத்த இடத்தை முன்பதிவு செய்வதற்கும், வாகனங்களின் நம்பர் பிளேட்டை ஸ்கேன் செய்வதற்கும் பிஓஎஸ் மிஷின்கள் தனிச் செயலி மற்றும் இணையதளம் உருவாக்கப்படும். இதனை செயல்படுத்துவதற்கான டெண்டர் விரைவில் கோரப்பட உள்ள நிலையில் முன்னதாக இந்த பணியை மேற்கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. நவம்பர் 14ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் டெண்டர் ஆவணங்கள் தயார் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!