இன்று சூரிய கிரகணம்!! நேரடியாக பார்க்கலாமா?

 
இன்று சூரிய கிரகணம்!! நேரடியாக பார்க்கலாமா?

இன்று டிசம்பர் 4ம் தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. சூரிய கிரகணம் என்பது சூரியன், நிலவு மற்றும் பூமி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருவதே.இந்த சூரிய கிரகணம் அண்டார்டிகாவில் இருந்து மட்டுமே நேரடியாக பார்க்க முடியும். சுமார் ஒரு நிமிடம் 54 நொடிகள் வரை இந்த கிரகணம் நீடிக்கும். வானில் இருள் உருவாகும்.

இன்று சூரிய கிரகணம்!! நேரடியாக பார்க்கலாமா?

அந்த நேரத்தில் வானில் நட்சத்திரங்கள் தெரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி, மதியம் 12:30 மணி முதல் 4.30 வரை நீடிக்கலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.முழு சூரியகிரகணம் இல்லாத பகுதி சூரிய கிரகணத்தை தென்னாப்பிரிக்கா, சிலி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து பார்க்க முடியும்.நாளை நடைபெற உள்ள இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் ‘ரிவர்ஸ் போலார் சோலார்’ என்ற சிறப்பை பெறுகிறது.

இன்று சூரிய கிரகணம்!! நேரடியாக பார்க்கலாமா?

சாதாரணமாக பூமியை நிலா மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் சுற்றும். ஆனால், நாளை சூரிய கிரகணத்தின் போது மட்டும் கிழக்கு திசையிலிருந்து மேற்கில், சுழலக் கூடும் அதனால் இது சிறப்பு வாய்ந்த சூரிய கிரகணம் என அழைக்கப் படுகிறது.இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் இந்த சூரிய கிரகணத்தை நேரில் காண முடியாது.ஆனால் அமெரிக்காவில் நாசா இணையதளத்தில் மூலம் நேரலையில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web