ஆன்லைன் கேமால் விபரீதம்... கடற்படை அதிகாரியின் மனைவியை குத்திக் கொலை செய்த மகன்!

ராஜஸ்தான் மாநிலத்தில் வசித்து வருபவர் 53 வயது பல்பீர்சிங். இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கிழக்கு கடலோர காவல்படை பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 47 வயது அல்காசிங் . இவர்களது மகன் 20 வயது அன்மோல்சிங். இவர் பிடெக் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தினசரி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதனால் இரவு பகல் எந்நேரமும் தனது அறையில் லேப்டாப்பில் விளையாடி வந்தார். இதனை அவ்வப்போது பெற்றோர் கண்டித்தனர். இருப்பினும் அன்மோல்சிங் அவற்றை பொருட்படுத்தாமல் விளையாடி வந்தார்.
இதேபோல் நேற்று முன்தினமும் வீட்டில் அன்மோல்சிங், காலையில் இருந்து இரவு வரை ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அவரது தாய் அல்காசிங், `எந்நேரமும் இப்படி ஆன்லைனில் விளையாடுகிறாயே?' எனக்கூறி திட்டி வசை பாடியுள்ளார்.
இதனால் தாய், மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அல்காசிங், தனது மகனின் லேப்டாப் மற்றும் செல்போனை பறித்து தனது அறையில் வைத்து பூட்டினார். `உனது தந்தை வந்தபின்னர் பேசிவிட்டு தருகிறேன்' எனக் கூறிவிட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அன்மோல்சிங், சமையலறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்து தனது தாயை சரமாரி குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அல்காசிங் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அன்மோல்சிங்கை கைது செய்தனர். வீட்டிற்கு வந்த கடற்படை அதிகாரி பல்பீர்சிங் தனது மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதார். ஆன்லைனில் விளையாடுவதை கண்டித்த தாயை, மகன் கொன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!