தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

மாலத்தீவில் நடைபெற்று வரும் 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் மாலத்தீவு, வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

முதல் பாதி நேர ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் இந்திய வீரர் மன்விர் சிங் முதல் கோலை அடித்து கணக்கை தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாலத்தீவு அணி 45-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து 1-1 என சமன் செய்தது.

2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்திரி அபாரமாக விளையாடி 62 மற்றும் 71-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடிக்க இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சுனில் சேத்திரி 124 போட்டிகளில் விளையாடி 79 கோல்கள் அடித்துள்ளார்.

From around the web