கடன் தொல்லையை போக்கும் விசேஷ அபிஷேகம்!! நம்பிக்கையோடு ஒரு முறை செய்து பாருங்க!!

 
கடன் தொல்லையை போக்கும் விசேஷ அபிஷேகம்!! நம்பிக்கையோடு ஒரு முறை செய்து பாருங்க!!


கடன் தொல்லையை நீக்குவதற்கென்றே சூப்பரான அபிஷேகம் ஒன்றுள்ளது. கடன் தொல்லை மட்டுமல்லாமல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இதில் நம்பிக்கை தான் முக்கியம். நம்பிக்கையுடன் வழிபட கைமேல் பலன் கிடைக்கும். பொதுவாக திங்கட்கிழமை என்றாலே சிவபெருமானுக்குரிய தினம். இந்த நாளில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபடகணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் . அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டித்தால் சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம் என்பது ஐதிகம்.
சந்திரன் இந்த விரதத்தை கடைப்பிடித்து தான் தனது குஷ்ட நோய் நீங்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அத்துடன் சிவனின் தலையில் இடம் பெறும் பாக்கியமும் பெற்றார்.

கடன் தொல்லையை போக்கும் விசேஷ அபிஷேகம்!! நம்பிக்கையோடு ஒரு முறை செய்து பாருங்க!!

மேலும் பெண்கள் தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெறவும், கணவனுக்கு மேன்மைகள் உண்டாகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி மாதங்களில் முதல் திங்கட்கிழமை முதல் கடைப்பிடிக்கலாம்.

கார்த்திகை சோமவார நாட்களில் அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடத்தப்படும் . இதன்படி 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, யாகசாலைகளில் வேள்வி செய்து, அந்த நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

கடன் தொல்லையை போக்கும் விசேஷ அபிஷேகம்!! நம்பிக்கையோடு ஒரு முறை செய்து பாருங்க!!

கார்த்திகை சோமவார தினங்களில் சந்திரசேகர மூர்த்திக்கு வெண்ணிற மலர்கள் மட்டுமே சூட்டப்படும். மேலும் வெண்பட்டாடை அணிவித்தால் ஆயுள் விருத்தியாகும். மன சஞ்சலம் விலகும். வம்சம் தழைக்கும். இந்த சங்காபிஷேகத்தை தரிசனம் செய்திட கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

From around the web