இன்றும் தமிழகம் முழுவதும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இன்றும் தமிழகம் முழுவதும் சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள் சென்னை திரும்ப வசதியாக பல மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரப்படுகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு வார இறுதியிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்குச் சென்றிருப்பவர்கள் மற்றும் புரட்டாசி மாதத்தையொட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்டிருப்பவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று 260 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 65 பேருந்துகளும் மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுவதாகவும் அதே போன்று வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!