பொங்கல் ஷாப்பிங்... சென்னையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கம்!

 
மாநகரப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலரும் பொங்கல் ஷாப்பிங்கில் குவிந்து வருகின்றனர். புத்தாடை, சொந்த ஊர் செல்லும்  வகையில் உறவினர்களுக்கான துணிமணிகள், புத்தக கண்காட்சி, மலர் கண்காட்சி என்று திரும்பும் திசையெல்லாம் சென்னை களைக்கட்ட துவங்கியுள்ளடு.

இந்நிலையில் பொதுமக்கள் மக்களின் தேவைகளின் அடிபப்டையில் சென்னையில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

பேருந்து

பொங்கல் பண்டிகை ஜனவரி  14ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.  

மாநகரப் பேருந்துகள்

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதாவது, பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் ஜன.4,5,11,12ம் தேதிகளில் கூடுதலாக 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தியாகராயர் நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web