இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்... ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய மறக்காதீங்க!

 
ரேஷன்

இன்று நவம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தல், முகவரி மாற்றம், திருத்துவது உள்ளிட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக்கோங்க. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் "பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் இன்று 9.11.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

ரேஷன் சர்க்கரை

இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். 

ரேஷன்

மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில், குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web