சிறப்பு வகுப்புக்கள் நடத்தக்கூடாது... பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 23ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த நாள் முதல் அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் ஜனவரி 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலைய்லி சில தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒரு சில குறிப்பிட்ட வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கு பள்ளிக்கல்வித் துறை கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த உத்தரவை முறையாக பின்பற்ற அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித் துறை அறிவுறுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு தொடர் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்து, அதற்கான சுற்றறிக்கை விடுவதும், அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்துவதும் தொடர் கதையாகவே இருந்து வருவதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!