தீபாவளி ஸ்பெஷல்... திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் சேவை!
வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது.

அதன்படி, திருச்சி – தாம்பரம் இடையே ஒரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்கள்: 06190 / 06191) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை தீபாவளி பண்டிகை காலத்தில் கூடும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க உதவும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சிறப்பு ரயில் நாளை (புதன்கிழமை) திருவெறும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடத்துக்கு தற்காலிக நிறுத்தம் பெறும் என்று தெற்கு ரெயில்வே தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ரயில்வே பயணிகள், பண்டிகை நாட்களில் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும்படி தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
