கந்த சஷ்டி விழா ... தாம்பரம்–திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் திருச்செந்தூருக்கு செல்லும் நிலைமை காரணமாக, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்செந்தூர் கந்தசஷ்டி

இந்த ரயில் (எண் 06135) தாம்பரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சேவையால் கந்த சஷ்டி விழாவிற்காக திருச்செந்தூருக்கு பயணிக்கும் பக்தர்களுக்கு பெரும் வசதி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்செந்தூர்

மறுமார்க்கமாக, திருச்செந்தூரிலிருந்து அக்டோபர் 27-ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06136), செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த சிறப்பு சேவைகள் விழா நாட்களில் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!