ஸோகோ தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஸ்ரீதர் வேம்பு விலகல் !

 
ஸ்ரீதர் வேம்பு


 
ஸோஹோ கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி  ஸ்ரீதர் வேம்பு . இவர்  முழு நேர ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் தலைமை விஞ்ஞானி பொறுப்பை ஏற்கவுள்ளதால், தற்போதைய பணியில் இருந்து விலகுவதாக  அறிவித்துள்ளார். இவரது திடீர் முடிவு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சைலேஷ் குமார் தவே நியமிக்கப்பட்டுள்ளார்.


இது குறித்து ஸ்ரீதர் வேம்பு, “நிறுவனத்தின் ‘தலைமை விஞ்ஞானி’ என்ற முறையில் தான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துவேன்” என தனது  எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்  “இன்று முதல் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. நான் Zoho Corp ன் CEO பதவியில் இருந்து விலகுகிறேன், AI ன் சமீபத்திய முக்கிய மேம்பாடுகள் உட்பட பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.  எனது தனிப்பட்ட கிராமப்புற மேம்பாட்டுப் பணியைத் தொடரும் போது R&D முயற்சிகளில் கவனம் செலுத்துவது சிறந்தது என முடிவு செய்யப்பட்டுள்ளது.  எங்கள் இணை நிறுவனர் ஷைலேஷ் குமார் டேவி எங்கள் புதிய குழுவின் CEO ஆக பணியில் தொடர்வார். இணை நிறுவனர் டோனி தாமஸ் எங்கள் Zoho US ஐ வழிநடத்துவார். சவாலை நாங்கள் சிறப்பாக வழிநடத்தினோம், மேலும் எனது புதிய வேலையை ஆற்றலுடனும் ஆர்வத்துடனும் எதிர்நோக்குகிறேன்” என பதிவிட்டுள்ளார்.  

ஸ்ரீதர் வேம்பு


கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருளை உருவாக்கும் தனியாருக்கு சொந்தமான நிறுவனமான ஜோஹோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வேம்பு.   அவரும் அவருடைய 2 சகோதரர்களும்  தான் ஜோஹோவில் பெரும்பான்மையான பங்குகளை வைத்துள்ளனர். வேம்பு பிரின்ஸ்டனில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web