பிக் பாசில் கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?!!

 
பிக் பாசில் கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?!!


தமிழ் திரையுலகில் உலக நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமலஹாசன். இவருக்கு சமீபத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.கமலஹாசன் காதி துணிகளை அறிமுகம் செய்ய அமெரிக்கா சென்று திரும்பியுள்ளார்

பிக் பாசில் கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?!!

சிகாகோ சென்று திரும்பியவுடன் கடந்த சனி, ஞாயிறு பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் பிறகே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தற்போது குறைந்தது 2 வாரங்கள் கமல்ஹாசன் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்

பிக் பாசில் கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன்?!!

இதனால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை கமலுக்கு பதில் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கலாம் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கில், நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்குப் பதிலாக அவரது மருமகள் சமந்தா தொகுத்து வழங்கினார்.
இதே பாணியில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.

From around the web