’’ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர்’’.. விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
கம்யூனிஸ்டுகளோ, விசிகவோ, காங்கிரஸோ திமுகவில் சேர வேண்டிய அவசியம் ஆரம்பத்திலிருந்தே இல்லை. ஆனால், நாங்கள் திமுகவுடன் இருப்பதற்கு ஸ்டாலின் தலைமைதான் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியை விட அதிக நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். இருந்த போதிலும், அனைத்து சவால்களையும் எதிர்கொள்வேன் என்றும், கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என எதிரிகள் கூறினால், அவர்கள் எந்த அளவிற்கு அச்சம் அடைந்துள்ளார்கள் என்றும், அவர்களை தளபதி ஸ்டாலின் எந்த அளவுக்கு அச்சுறுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தான அரசியல்வாதி என்றும், கம்யூனிஸ்டுகள், வி.சி.க அல்லது காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதலே திமுகவுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நாங்கள் திமுகவுடன் இருப்பதற்கு ஸ்டாலின் தலைமைதான் காரணம் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!