டிச.27 முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பயணம்... முன்னேற்பாடுகள் தீவிரம்!

 
முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 29 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு முதலில் தூத்துக்குடி செல்கிறார். அங்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியோ டைடல் பார்க் கட்டடத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து டிசம்பர் 30ம் தேதி காலை தூத்துக்குடியில் புதுமைப் பெண் விரிவாக்க திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். 

கீதாஜீவன்

தூத்துக்குடியில் தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி திருச்செந்தூர் பிரதான சாலையில், நியோ டைடல் பார்க்  அமைந்துள்ள பகுதியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடி

இதில் எம்எல்ஏக்கள் விளாத்திகுளம் மார்க்கண்டையன், ஓட்டப்பிடாரம் சண்முகையா, தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் அருண் குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர். 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web