செப்டம்பரில் துவங்குகிறது... முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்... எப்படி முன்பதிவு செய்வது? முழு விபரம்!

 
முதல்வர் ஸ்டாலின்
செப்டம்பர்  முதல் அக்டோபர் மாதம் வரையில் தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் கற்றல் திறனுடன் பள்ளி மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பள்ளிகளில் விளையாட்டு திறனை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாணவர்கள் தங்களது திறமைக்கான அங்கீகாரம் பெறும் வகையில் தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் 2024 யை அறிவித்துள்ளது.

முதல்வர் கோப்பை

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். இந்த  இணையதள முன்பதிவை  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2024 தொடரில் புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக 27 விளையாட்டுகள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் செப்டம்பர்  மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற உள்ளது.  

முதல்வர் கோப்பை

இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தகவல்களை  www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இணையதளத்தில் போட்டியில் கலந்து கொள்பவர்கள் கேட்கப்பட்ட   ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த போட்டிகள் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web