போர்களை நிறுத்தப் போகிறேன்... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சூளுரை!

 
ட்ரம்ப்


 
 அமெரிக்கா  அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராகியுள்ளார்.  இந்த தேர்தலில் வெற்றிக்கு  இந்திய பிரதமர்  மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதென்யாகு, ஈரான் பிரதமர் பெசேஷ்கியான் ஆகியோர் ட்ரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வெற்றிக்கு  பிறகு  டிரம்ப் அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதில், ‘தான் போர்களை நிறுத்த போவதாக’ அறிவித்துள்ளார்.  அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் இப்படி கூறுவது உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


அதற்கு காரணம், கிழக்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் – ஈரான் இடையேயான தாக்குதலின் போது டிரம்ப், ‘நான் அமெரிக்க அதிபராக இருந்தால் ஈரானின் அணு ஆயுத கிடங்கை தகர்ப்பேன்’ எனக்  கூறியிருந்தார். இந்த பேச்சு அந்த சமயத்தில்  உலக நாடுகளில் சர்ச்சையாக பேசப்பட்டது. அதே போல ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரிலும் ரஷ்யா மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.எந்த ஒரு சர்வதேச முடிவுகள் அவர் எடுத்தாலும் அதை யோசிக்காமல் டிரம்ப் எடுப்பார் என அவர் மீது ஒரு குற்றசாட்டு நீடித்து வரும் நிலையில்  அதிபராக வெற்றி பெற்ற பிறகு இப்படி பேசுவது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ட்ரம்ப்


அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக, குடியரசு வேட்பாளரான டிரம்ப் மீது, ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், ஒன்று தான் ‘டிரம்ப் அமெரிக்க அதிபரானால் உலக நாடுகளின் அமைதி கெடும்.   இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரை தூண்டி விட்டு 3ம் உலக போருக்கு வழிவகுப்பார்’ என கூறி இருந்தார். ஆனால், அப்போது டிரம்ப் இதற்கு எந்த பதிலும் கூறாமல் தேர்தலில் வெற்றிப் பெற்ற பிறகு இப்படி கூறுவது எதிர்க்கட்சிகளுக்கு சரியான ஒரு பதிலடியாகவே அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து ஆதரவாளர்கள் முன்னிலையில் “அமெரிக்காவிற்கு என் மூச்சு இருக்கும் வரை கடுமையாக உழைப்பேன். அவர்கள் (ஜனநாயக கட்சி) நான் போரைத் தொடங்குவேன் என தேர்தலுக்கு முன் கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நான் எந்த போரையும் தொடங்கப்போவதில்லை. நான் உலக நாடுகளிடையே நடக்கும் போரை நிறுத்த போகிறேன்”, என டிரம்ப் உரையாற்றியுள்ளார். இந்த கருத்துக்கள்  உலக நாடுகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web