கோவையை போல சென்னையிலும் கடும் கட்டுப்பாடுகள்! ககன்தீப்சிங்!

 
கோவையை போல சென்னையிலும் கடும் கட்டுப்பாடுகள்! ககன்தீப்சிங்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 3வது அலை அச்சம் காரணமாகவும், மக்களின் பாதுகாப்பின் அடிப்படையிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் குறிப்பாக கேரளாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை உட்பட சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

கோவையை போல சென்னையிலும் கடும் கட்டுப்பாடுகள்! ககன்தீப்சிங்!

அந்த பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லை பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு சோதனைச் சாவடிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையை பொறுத்தவரை செய்திக்குறிப்பு ஒன்றை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முகக்கவசம் , சமூக இடைவெளியை தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

கோவையை போல சென்னையிலும் கடும் கட்டுப்பாடுகள்! ககன்தீப்சிங்!


மேலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் சென்னையில் 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. பாதிப்புக்களின் அடிப்படையில் கோவையை போல சென்னையிலும் கூடுதல் கொரோனா கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web