துருக்கியில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்!
துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ள பாலிகெசிர் மாகாணத்தின் சிந்திர்கி நகரில் நேற்றிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி, இஸ்தான்புல், புர்சா, மணிசா, இஜ்மீர் உள்ளிட்ட மாகாணங்களிலும் அதிர்வு உணரப்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சொத்து சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்டிலும் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னரும் அந்தப் பகுதிகளில் சிறிய அளவிலான அதிர்வுகள் பதிவாகி வந்தன.

துருக்கி நிலநடுக்கம் தாக்கத்திற்கு ஆளாகும் நாடுகளில் ஒன்றாகும். 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது 11 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், சிரியாவின் வடக்கு பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
