உஷார்... ஆன்லைனில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட மாணவி மரணம்... 800 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல்!

 
ஸ்டெபி

 தமிழகத்தில் திருச்சியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்டெபி, ஆன்லைன் மூலமாக அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட நிலையில், அடுத்த நாள் காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டு உயிரிழந்திருந்தாலும், கடைகளில் சோதனையிட்டு 800 கிலோ காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணி தெரிவித்தார். 

நூடுல்ஸ்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின். திருச்சியில் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த ஸ்டெபிக்கு பிடித்தமான உணவாக நூடுல்ஸ் இருந்துள்ளது. வழக்கம் போல் நேற்று முன் தினமும் இரவு ஆன்லைன் மூலமாக அமேசானில் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ்  ஆர்டர் செய்திருந்த நிலையில், அதனை சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் மகள் எழுந்திருக்காததால் அவரது தந்தை எழுப்ப முயன்றுள்ளனர். அப்போது தான் மகள் உயிரிழந்த விஷயம் தெரிய வந்துள்ளது. 

உத்தரபிரதேச போலீஸ்

நன்றாக பேசிக் கொண்டிருந்து விட்டு தூங்க சென்ற மாணவி உயிரிழந்தது குறித்து காவல் நிலையத்திற்கு புகார்கள் வர, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்டெபியின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web