குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மெழுகுபட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் கெவின் குமார் (12).

உருளைகுடியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தங்கி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் கெவின்குமார் அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக கிணற்று நீரில் மூழ்கினார். கிராம மக்கள் கிணற்றில் இறங்கி சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
