கல்லூரி சாலை கடக்க முயன்ற போது விபத்தில் சிக்கிய மாணவி.. 15 மாதங்களுக்கு பிறகு உயிர் பிரிந்த சோகம்!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கோண்டான் குளங்கரா பகுதியை சேர்ந்தவர் வாணி ரோமசேகரன் (வயது 24). இவர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூரில் உள்ள சட்டக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் வாணி சோமசேகரன் மீது மோதியது.
இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தெள்ளகம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்தபடியே வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 15 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த வாணி சோமசேகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!