மாணவி வன்கொடுமை வழக்கு... கைதானவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.. அமைச்சர் துரைமுருகன்!

 
துரைமுருகன்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைதானவருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவியின் புகாரின் பேரில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஞானசேகர் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஞானசேகர் என்பவர் துணை முதல்வர் உதயநிதியுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், கைதானவருக்கும், திமுகவினருக்கும் இடையே எந்த சம்மந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதில் அடுத்த அதிர்ச்சியாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, எப்.ஐ.ஆர். நகல் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களை வெளியிடக் கூடாது என்றும், தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஞானசேகரன்

இந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து சென்னையில் இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், “அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் என்றும், கைதான நபர் திமுக நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விளக்கமளித்தார்.

பாலியல் ஞானசேகரன்

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் பேசுகையில், "கைதான நபர் பிரியாணி கடைக்காரர் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த நபருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்று தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web