கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் பணி இடைநீக்கம்!

 
சிறுமிக்கு பாலியல் சீண்டல்
நாகர்கோவிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

நாகர்கோவில் கோணத்தில் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராமசந்திர சோனி (50) என்பவர் ஓவிய கலைப்பிரிவு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். 

பாலியல் கற்பழிப்பு செக்ஸ் பலாத்காரம்

அதன்பேரில் பள்ளி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த விவகாரம் பற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள் இதுபற்றி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமசந்திர சோனியை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஆசிரியர் ராமசந்திர சோனி மீது துறை ரீதியான நடவடிக்கையாக அவரை பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web