சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை!

 
போரூர்
 

சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகணேஷ் எனும் மாணவர் பயின்று வந்துள்ளார். ரிஷிகணேஷ் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவரது காதலி ரிஷிகணேஷின் காதலைக் கைவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்து வந்த ரிஷிகணேஷ் மருத்துவ கல்லூரியின் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

தற்கொலை

நீண்ட நேரமாக அறையில் இருந்து ரிஷிகணேஷ் வெளிவராத நிலையில் சந்தேகமடைந்த சக நண்பர்கள் அறையில் சென்று பார்த்த போது ரிஷிகணேஷ் சடலம் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து விடுதி வார்டன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். 

ஆம்புலன்ஸ்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரிஷிகணேஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web