முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டாவுடன் கலந்துக்கொண்ட மாணவிகள்.. அனுமதி மறுத்ததால் வெடித்த சர்ச்சை!

 
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்ற சிந்துவெளி நிகழ்ச்சிக்கு  கருப்பு துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கும் முன், மாணவிகள் சில பேர் அணிந்திருந்த கருப்பு துப்பட்டாக்களை வாயிலில் இருந்தவர்கள் வாங்கிச் சென்றனர். இதேபோல், கறுப்பு குடைகள் மற்றும் கைப்பைகள் கூட நிகழ்ச்சி அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் கருப்பு துப்பட்டாக்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விழா அரங்கிற்குள் கருப்பு துப்பட்டாவை அனுமதிக்காததற்கான காரணம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று மாணவிகள் தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்  கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு கருப்பு துப்பட்டா அணிந்து மாணவிகள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web