3வது முயற்சியில் வெற்றி.. கணவர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி.. விசாரணையில் அதிர்ச்சி!

 
ஜெயந்தி

காஞ்சிபுரம் மாவட்டம் புதுநல்லூரைச் சேர்ந்தவர் ரவி. மீன் வியாபாரியான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பள்ளி மற்றும் கல்லூரி வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ரவி, தினமும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை தாங்க முடியாத ஜெயந்தி, சமையல் எண்ணெயை வேகவைத்து தூங்கிக் கொண்டிருந்த ரவி மீது ஊற்றினார். பலத்த காயமடைந்த ரவி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இச்சம்பவத்தை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், ஜெயந்தியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது, ​​கணவர் செய்த கொடுமையை தாங்க முடியாமல் இதுவரை இரண்டு முறை கணவனை கொல்ல முயன்றதாக கூறினார். இதன்படி ஒரு முறை உணவில் விஷம் வைத்தும், மற்றொரு முறை பீரோவை தள்ளியும் கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் இந்த முயற்சிகளில் இருந்து ரவி தப்பியதால், அவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக ஒப்புக்கொண்டார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web