இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!


இன்று, கார்த்திகை 20, டிசம்பர் 06, 2021, திங்கட்கிழமை
திதி : திரிதியை
நட்சத்திரம் : பூராடம்
யோகம்: மரணயோகம்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்:
காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை
எம கண்டம்:
காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை
குளிகன்:
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

சுப ஹோரைகள்:
மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை
மதியம் 3.00 மணி முதல் 4.00 மணி வரை
மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை
இரவு 10.00 மணி முதல் 11.00 மணி வரை

இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று மந்தமான நாள். காரியத் தடை , காலதாமதம் உருவாகலாம். கருத்து வேறுபாடுகள் , தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் இடையூறுகள் உருவானாலும் அனுகூலம் கிட்டும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று சந்திராஷ்டமம் . ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். காரியத்தடை, காலதாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மந்தமாக இருக்கும். உறவினர்களிடையே வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இன்று இனிய நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டு. நண்பர்களால் ஆதரவு கூடும். பொன், பொருள் , ஆபரண சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டு.

கடகம்

இன்று உற்சாகமான நாள். சுபகாரியம் கைகூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய முயற்சிகளில் லாபம் அடையலாம். பணம் பல வழிகளில் வந்து சேரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

சிம்மம்

இன்று விரயமான நாள். புதிய முயற்சிகளில் கடின உழைப்புக்கு பிறகு அனுகூலம் கிடையலாம். சேமிப்புக்கள் குறையலாம். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். பொறுமையும், நிதானமும் அவசியம். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும்.

கன்னி

இன்று அனுகூலமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பொறுமையும், நிதானமும் கடைப்பிடித்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டு. புதிய முயற்சிகளில் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

துலாம்

இன்று அமோகமான நாள். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். புதிய முயற்சிகளால் நல்ல பலன் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று சுமாரான நாள். காலதாமதம் உருவாகலாம். புதிய முயற்சிகளில் உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எதிர்பார்த்த உதவியில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். செலவுகளை சமாளிக்க சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது.

தனுசு

இன்று வெற்றிகரமான நாள். பணவரவு தாரளமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்புக்கள் உயரும்.

இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியத்தில் வெற்றி!!

மகரம்

இன்று சங்கடமான நாள். காரியத்தடை உருவாகலாம். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியம் கைகூடும். சிக்கனத்தை கடைப்பிடிப்பதால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.ஆரோக்கிய குறைபாடுகள் உருவாகலாம்.

கும்பம்

இன்று யோகமான நாள். எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். தெய்வநம்பிக்கை கூடும்.

மீனம்

இன்று இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். சுபகாரியம் கைகூடும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். உறவினர்களால் மகிழ்ச்சி கூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதால் அனுகூலம் அதிகரிக்கும்.

From around the web