இப்படி ஒரு நோயா?.. கொத்து கொத்தாக கொட்டும் முடி.. மகாராஷ்டிராவில் பரவும் மர்ம நோய்!
மகாராஷ்டிராவில், கொத்தாக முடி உதிர்தலை ஏற்படுத்தும் ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா கிராமங்களில் உள்ள அனைத்து தரப்பு ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் முடி உதிர்தலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 50 பேர் முடி உதிர்ந்து வழுக்கை விழுந்ததாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இதனால், பீதியடைந்த மக்கள் அவசரமாக அருகிலுள்ள மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மாசுபட்ட தண்ணீரால் நடந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகு, ஒரு பரிசோதனை நடத்தப்பட்டது. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, “உங்கள் தலையில் உள்ள முடியைத் தொட்டாலே கையோடு வரும். சுமார் 50 பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
மூன்று கிராமங்களுக்கும் வழங்கப்படும் தண்ணீர் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, முடி மற்றும் தோல் மாதிரிகளும் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் வந்ததும், முடி உதிர்தலுக்கான காரணங்கள் தெரியவரும். "எனவே, கிராம மக்கள் தங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்," என்று அவர்கள் கூறினர். கிட்டத்தட்ட 10 நாட்களாக பரவி வரும் இந்த மர்ம நோய்க்கான காரணம் தெரியவில்லை.இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!