திடீரென காணமல் போன சிறுமி.. ATM மையத்தின் உதவியால் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி தருணம்!

 
மொலாய் சிறுமி

தென்கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Quzhou பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, நடன வகுப்பிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் தனது தாத்தாவை திடீரென பிரிந்து விட்டார். மொலாய் தொலைபேசி இல்லாமல், தெரியாத நபர்களின் உதவியின்றி தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார். அச்சிறுமி தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்ட விதம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது.

முதலில் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் சிறுமி கவலை அடைந்தார். இருப்பினும், அருகிலுள்ள ஏடிஎம் மையத்தை கண்டறிந்த அவர், வங்கியின் கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்ட இயந்திரத்தின் அருகே சிவப்பு பொத்தானை அழுத்தினார். Quzhou Rural Commercial வங்கியின் ஊழியர் Zhou Dongying, இண்டர்காம் அமைப்பு மூலம் சிறுமியின் அழைப்பிற்கு பதிலளித்தார்.

"உன் தாத்தா போன் நம்பர் இருக்கா?" வங்கி ஊழியர் கேட்டார், ஆனால் சிறுமி தனது தாத்தாவின் தொலைபேசி எண்ணையோ மற்ற குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண்களையோ நினைவுபடுத்த முடியவில்லை. போலீசாரை எச்சரித்த வங்கி ஊழியர், அவளை தொடர்ந்து ஆறுதல்படுத்துமாறு கூறினார். அவரும் அச்சிறுமியிடம், "இங்கே இரு, நகராதே, போலீஸ் வருகிறது" என்று கூறினார். Kaihua County Public Security Bureau காவல் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு தாத்தாவிடம் சேர்த்தனர்.

Zhejiang மாகாணத்தில் உள்ள Hangzhou இல் உள்ள பல உள்ளூர் ATMகள், இயந்திரத்திற்கு அருகில் இரண்டு வகையான அவசர உதவி பொத்தான்களைக் கொண்டுள்ளன. "அவசர அழைப்பு" பொத்தான் மற்றும் சிவப்பு "அவசர எச்சரிக்கை" பட்டன். அவசர அழைப்பு பொத்தானை அழுத்துவதன் மூலம் வங்கியின் கண்காணிப்பு மையத்துடன் மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ள இது உதவுகிறது.

மறுபுறம், ஏடிஎம்மில் அவசரநிலை ஏற்பட்டால் காவல்துறையினரை விரைவாக எச்சரிக்கும் வகையில் அலாரம் பட்டன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வைரலானதையடுத்து, பல நெட்டிசன்கள் சிறுமியை பாராட்டி ஏடிஎம் பயன்படுத்தியதற்கு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். ஒரு பயனர் கூறினார், "அச்சிறுமி மிகவும் புத்திசாலி," என்று ஒருவர் கூறினார்.மற்றொரு பயனர், “ஏடிஎம்களை இப்படிப் பயன்படுத்தலாம் என்பது இதுவே முதல் முறை. புத்திசாலி பெண். அழகான ஊழியர்களுக்கு பாராட்டுக்கள், ”என்று அவர் கூறினார்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web