திடீரென ஊருக்குள் புகுந்த காட்டுயானை.. விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய நெகிழ்ச்சி செயல்!

 
தொண்டாமுத்தூர் காட்டு யானை

கோவை அருகே தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டில் இருந்து வெளியே வரும் யானைகள், விவசாய தோட்டங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி நாசத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காருண்யா நகர் அருகே சத்யா அவென்யூ பகுதியில் உள்ள ஜெயகுமார் என்பவரின் வீட்டின் பின்புற நுழைவாயிலை உடைத்து ஒரு காட்டு யானை உள்ளே நுழைந்தது.

பின்னர் சிறிது நேரம் வீட்டு வளாகத்தில் சுற்றித் திரிந்தது. பின்னர் முன்பக்க நுழைவாயில் வழியாக வீட்டை விட்டு வெளியேறியது. அதற்கு முன், வீட்டு வளாகத்தில் உள்ள விநாயகர் சிலையைத் தொட்டு வணங்கியது. இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web