பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு கரும்பு கொள்முதல்... விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை!!
Updated: Jan 4, 2025, 06:49 IST
தமிழகம் முழுவதும் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில், கரும்பு கொள்முதல் தொடர்பாக விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
அரசுக்கு கரும்பு வழங்க விவசாயிகள் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதே சமயம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படும்.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்கப்பட உள்ள கரும்பை, அரசுக்கு கொள்முதல் செய்ய தர விரும்பும் விவசாயிகள் இணைப் பதிவாளரை நேரில் அணுகலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web