தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல்... மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் வெளியீடு!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்பட உள்ள நிலையில், இதற்காக விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்கிறது. இணைய தளம் வாயிலாகவோ அல்லது சம்மந்தப்பட்ட இணைப் பதிவாளர்களையோ தொடர்பு கொண்டு கரும்பு விவசாயிகள் பயன் பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சக்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்கிட உத்தரவிட்டார்கள்.
அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராக கொண்டு வேளாண்மைத் துறை இணை இயக்குநர், கூட்டுறவுச் சங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டும், சென்னை மாவட்டத்தில் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அவர்களை தலைவராக கொண்டு உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையாளர் அவர்களை உறுப்பினராகக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!