தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! மீண்டும் ஒரு மாணவி தீக்குளிப்பு!

 
தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! மீண்டும் ஒரு மாணவி தீக்குளிப்பு!


இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கள் படிக்க நீட் தேர்வுகள் எழுத வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடப்பாண்டுக்கான நீட் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டன.
இந்தத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கேள்வித்தாள் பயத்திலும் இதனை எதிர்கொள்ள அச்சப்பட்டும், தேர்வு முடிவுகளில் தோல்வியை சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சத்திலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது.

தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! மீண்டும் ஒரு மாணவி தீக்குளிப்பு!


மாணவர்களிடையே எத்தனையோ புத்தாக்க பயிற்சிகள், விழிப்புணர்வுக் கூட்டங்களை அரசும், பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் , பெற்றோர்களும் செய்து வந்த போதிலும் இந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரியில் நீட் தேர்வு எழுதிய மாணவி அனுசுயா தீக்குளித்துள்ளார்.

தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! மீண்டும் ஒரு மாணவி தீக்குளிப்பு!

தேர்வு எழுதி வந்த நாளில் இருந்தே சரியாக எழுதவில்லை புலம்பியபடியே இருந்துள்ளார். எத்தனை சமாதானங்களும், ஆறுதல்களும் உறவினர்கள் சொன்ன போதிலும் அனுசுயா தற்கொலைக்கு முயன்றது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 40 சதவிகித தீக்காயத்துடன் அனுசுயாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From around the web