தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! சோகத்தில் தமிழகம்!

 
தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! சோகத்தில் தமிழகம்!


இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான நீட் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 1.2லட்சம் பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.

தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! சோகத்தில் தமிழகம்!

அந்த வகையில் அரியலூர் மாவட்டம் துவரங்குறிச்சியில் மாணவி கனிமொழி நீட் தேர்வை எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்து தேர்வு சரியாக எழுத முடியவில்லை எனக் கூறி மிகுந்த மனக் குழப்பத்தில் இருந்து வந்தார். முடிவு குறித்த பயத்தால் மாணவி கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள்! சோகத்தில் தமிழகம்!


நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த கனிமொழி பிளஸ் 2 வில் 600க்கு 562.28 மதிப்பெண் எடுத்துள்ளார். 10ம் வகுப்பில் 500க்கு 469 மதிப்பெண்கள் எடுத்து தனியார் பள்ளியில் முதலிடம் பிடித்திருந்தார்.ஏற்கனவே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேட்டூர் தனுஷ் தற்கொலை செய்த நிலையில் இப்போது அரியலூர் மாணவி கனிமொழியும் தற்கொலை செய்திருப்பது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web