சண்டே ஸ்பேஷல்: சிக்கன் 65 பெயர் எப்படி வந்தது தெரியுமா? - சுவாரஸ்யமான வரலாறு!

 
சிக்கன் 65

அசைவப் பிரியர்களின் விருப்பமான 'சைடு டிஷ்' பட்டியலில் முக்கிய இடம்பிடிக்கும் 'சிக்கன் 65' உணவு வகைக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது என்ற கேள்வி பலருக்கும் இன்று வரை விடை தெரியாத ஒன்றாகவே உள்ளது. 65 நாட்கள் வளர்ந்த கோழியில் இருந்து தயாரிக்கப்படுவதால் இந்தப் பெயர் வந்தது என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், அது தவறு.

சிக்கன் 65

பெயர் வந்ததன் ருசிகர பின்னணி

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபல அசைவ உணவகம் தான் இந்தக் கேள்விக்கு விடையளிக்கிறது. அந்த உணவகத்தில் 1965ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினத்தன்று, வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாக மசாலாவில் ஊற வைக்கப்பட்ட பொரித்த கோழிக்கறித் துண்டுகள் பரிமாறப்பட்டன. அந்தப் புதிய உணவைச் சுவைத்த வாடிக்கையாளர் ஒருவர், "இதற்குப் பெயர் என்ன?" என்று கேட்டிருக்கிறார்.

சிக்கன் பக்கோடா

அதற்கு அந்த உணவகத்தின் உரிமையாளர், அந்த ஆண்டைக் குறிப்பிட்டு, 'சிக்கன் 65' என்று பெயர் வைத்திருக்கிறார். அன்று முதல் மசாலாவில் ஊற வைத்து பொரித்த கோழிக்கறித் துண்டுகள் 'சிக்கன் 65' என்றே அழைக்கப்படுகின்றன. சரத்குமார் - வடிவேலு நடித்த 'திவான்' படத்தில் இந்தச் சிக்கன் 65 பெயரை வைத்து நகைச்சுவைக் காட்சியும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!